இரு பாலரும் சமமே, இதில் இல்லை ஐயமே

பெண்ணுரிமை பெண்ணுரிமை என்பார் மேடையிலே
பெண்ணை அடிமை செய்வார் வீட்டினிலே
முப்பத்திமூன்று விழுக்காடு என்பார் சட்ட சபையிலே
நகராட்சி உறுப்பினர் ஆக்குவார் பெயரளவிலே
கணவன்மார் ஆதிக்கம் தான் செயல் அளவிலே
ஜாதி இரண்டு தான் இது ஒளவைப்பாட்டு
நீதி எங்கே என்பது பெண்கள் பேச்சு
இரு பாலரும் சமம் என்பதே இறைவன் வாக்கு
ஆனால் இங்கு நிலவுவதோ வேறு நோக்கு
பத்து மாதம் பாலகனை பாங்கோடு சுமக்கும் பெண்கள்
நாட்டையும் வீட்டையும் நலமாக்கும் கண்கள்
பெண்ணுக்கு சம உரிமை என்ற பேச்சே பேத்தல்
ஆணும் பெண்ணும் சமம் என்பதே ஏற்றல்.

Comments

MB said…
Very nice thoughts and words, keep writing :)
GAYATHRI said…
he he he...nagaraatchi urupinar aakuvaar peyar alavile!!!super perippa!!!gr8 work carry on:)