அன்னைக்கு அணி


அகிலத்தில்  அன்னையாய்  ஆட்சிசெய்து
அன்புடன்  அனைவரையும்  ஆளாக்கி
பாசத்துடன்  பண்புடன்  நாம்  வளர
பாங்காக  பணிசெய்த  எம்தாயே

அனைவருக்கும்  அன்புடன்  அண்ணமாவாக
ஆதரவுடன்  பவணிவந்த  அன்புள்ளமே
நின்  பிறந்தபயனை  செவ்வனே  செய்யினும்
காலத்தின்  கட்டளையால்  காற்றில்  கரைந்தாயே

நின்நினைவினை  என்றும்  நெஞ்சினில்  நிறுத்தி
பூமிதனில்  நீ  அவதரித்த  நன்னாளை
நன்றியுடன்  நின்  பொற்பாதங்களை  நினைவுகூறும்
உன்  வயிறுதித்த  உன்னத  நன்மக்கள்.

                              இரா.முத்துகுமரன்

Comments