இலஞ்சம் எதையும் மிஞ்சும்


இலஞ்சம்  இலஞ்சம்  இலஞ்சம்
எங்கும்  இதற்கு  இல்லை
பஞ்சம்  பஞ்சம்  பஞ்சம்
கொடுக்க  வெம்புதே
நெஞ்சம்  நெஞ்சம்  நெஞ்சம்
தராவிடில்  உன்  வேலை
மந்தம்  மந்தம்  மந்தம்
வழியின்றி  இலஞ்சம்  கொடுத்தொழி
என  உன்  உள்ளம்
கெஞ்சும்  கெஞ்சும்  கெஞ்சும்
இலஞ்சம்  எறிந்தபின்  செயல்
விஞ்சும்  விஞ்சும்  விஞ்சும்
ஆதலால்  நீ  அடைய  நேருமே
தஞ்சம்  தஞ்சம்  தஞ்சம்
இன்றேல்  வெறும்  அலைச்சல்தான்
மிஞ்சும்  மிஞ்சும்  மிஞ்சும்.

Comments