இலவசங்கள் ஈனங்கள்


இலவசங்களை வீசி ஈனமாக்காதே
இசைபட வாழும் வழியை அடைக்காதே
மானத்துடன் வாழ அறிவுரை செய்
மரியாதையுடன் வாழ வழிவகை செய்
மீனை இலவசமாய் கொடுக்காதே
மீன் பிடிக்கும் முயற்சியை சிதைக்காதே
இலவசங்களை நிறுத்தி விடு
வாழும் வழியைக் கற்றுக்கொடு
நிமிர்ந்து வாழ செய்துவிடு
நெஞ்சை நிமிர்த்தி வாழவிடு.

Comments