தூய்மை இந்தியா

Image result for clean india

தூய்மை   தூய்மை  தூய்மை
எங்கும்  தூய்மை  எதிலும்  தூய்மை
சீரான  வாழ்விற்குத்  தேவை
அனைத்திலும்  கைக்கொள்ளும்  தூய்மை 

போற்ற  பட  வேண்டியது  தாய்மை
செயற்பட  வேண்டியது  தூய்மை 
ஆட்சியாளரிடம்  விரும்புவது  நேர்மை 
வேண்டுவது   நிர்வாகத்தில் தூய்மை 

தொடங்குவோம்  வீட்டில்  தூய்மை 
கடைபிடிப்போம்  சுற்றுபுறத்  தூய்மை 
தூய்மையே சுகாதாரத்தின்  தாய் 
இழப்பின்  நிலவுமே  அவலப்பேய் 

வீட்டின்  தூய்மை  நன்மை  பயக்கும்
சுற்றுபுறத்  தூய்மை  நோயைத்தவிர்க்கும் 
நகரின்  ூய்மை  பெருமை  பயக்கும் 
நாட்டின்  தூய்மை  உயர்வைக்  கொடுக்கும் 

குப்பைகளை அகற்றுவோம்
கழிவு நீரை ஒதுக்குவோம்
சாலைகளை சீர் செய்வோம்
காரித்துப்பலை களைந்திடுவோம்   

தாய்மை வாய்மை நேர்மை
இதற்கொப்ப வருமே தூய்மை
தூய்மை மிக்க பாரதம்
விரைவில் நாமே காணுவோம்.


இரா.மு.குமரன்

Comments