இனிமையான இல்லாள்




இனிமையான இல்லாள்


   

எதிர்மறை  எண்ணத்தை  எடுத்தெறிந்து
நேர்மறை   உணர்வை  உள்புகுத்தி
உண்மைப்  பாசத்தை  நிலைநிறுத்தி 
அன்பெனும்  நறுமணத்தை அள்ளித்தெளித்து

அனைவரையும்  அரவணைக்கும்  நற்பாங்கை
செயலிலே  காட்டும்  நேர்மையினை
சிந்தையிலே கைக்கொள்ளும் இரக்கச் சிந்தனையை
என்னவென்றே  நான்  பகர

இயல்பையே  இயல்பாய்  கொண்ட
கடமையைத்  தொடர்ந்தாள் என் மனையாள்
கண்ணுற்ற  நான்  கொண்ட  மகிழ்வுக்கு
ஈடுன்றோ  இவ்வையகம்  செப்பிடுவீர் .  

Comments